‘ALL IS NOT WELL’: 'கொஸக்ஸி பசப்புகழ்'!

‘ALL IS NOT WELL’: 'கொஸக்ஸி பசப்புகழ்'!

யக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நண்பன். இந்தப் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் என்கிற கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரம் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில், ‘கொஸக்ஸி பசப்புகழ்’ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவர், ‘ஆல் இஸ் வெல்’ என அடிக்கடி கூறுவார். இதுவும் சோனம் வாங்சுக்கின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய ஒரு விஷயம் என்று சொல்லப்படுகிறது.

சோனம் வாங்சுக் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை வைத்துள்ளார். அந்தக் வீடியோவில் அவர், ‘ஆல் இஸ் நாட் வெல்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இதற்குப் பொருள், லடாக்கில் எந்த விஷயமும் நன்றாக இல்லை என்பதாகும். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் எற்படுத்தி இருக்கிறது. சோனம் வாங்சுக் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கும் விஷயம் என்னவென்றால், “நீங்கள் உடனடியாக லடாக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இங்குள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் வணிகம் யாவும் குறுகிய காலத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். காஷ்மீரி பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகள், ‘உடனடியாக லடாக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடில் இங்குள்ள மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உருகி விடும்’ என்று கூறுகிறது.

அதிலும் குறிப்பாக, காஷ்மீரி பல்கலைக்கழக ஆய்வுகளின்படி நெடுஞ்சாலைகள், மனிதர்கள் வாழும் பகுதியை ஒட்டிய இடங்களில் உள்ள பனிப்பாறைகள் யாவும் மிக வேகமாக உருகி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆகவே, நம்மை சுற்றியுள்ள மாசு, ரசாயனக் கழிவுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதோடு, லடாக் போன்ற பகுதிகளில் குறைவான மனித நடமாட்டமே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, இங்குள்ள பனிப்பாறைகள் விரைவில் உருகாமல் இருக்கும். அதனால், பிரதமர் மோடியிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். லடாக் மற்றும் இமாலய மலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில், இவை யாவும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com