கர்நாடகாவில் அனைத்து வகை பொருட்களின் விலையும் உயர்ந்ததால் மக்கள் அவதி!

மாதிரி படம்
மாதிரி படம்
Updated on

ணவுப் பொருள் பற்றாக்குறை, அரசின் திட்டங்களுக்கு ஆகும் செலவு அதிகரிப்பு, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் கர்நாடகாவில் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது, இது மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதுமே உணவுப் பொருள் விளைச்சல் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் கையிருப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதால் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொருட்களினுடைய விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் அதிகப்படியான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதோடு கூடுதல் வரிகள் காரணமாக அனைத்து வகை பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

கர்நாடகாவில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ சான்று பெற்றவர்களுக்கு மாதம் 1500 ரூபாய், மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம், மேலும் ரேஷன் கார்டுகளுக்கு மாதம் மாதம் 10 கிலோ விலை இல்ல அரிசி மேலும் 200 யூனிட் விலையற்ற மின்சாரம் போன்ற திட்டங்களை அறிவித்து தற்போது செயல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் கர்நாடக மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் அரசின் சலுகை திட்டங்களுக்கு வருடத்திற்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகுதால், கூடுதல் நிதி அரசிற்கு தேவைப்படுகிறது. இதனால் மாநில முழுவதும் அனைத்து வகை பொருட்களும் விலை உயர்வை சந்தித்து இருக்கின்றன.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் 10 முதல் 30 சதவீதம் விலை உயர்வை சந்தித்திருக்கின்றனர். மேலும் நேற்று அரசு துறை பால் நிறுவனமான நந்தினி மற்றும் கர்நாடகப் பால் கூட்டணிக்கு நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தயிர், மோர், நெய் போன்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் மதுபான வகைகள் 8 முதல் 15 சதவீதம் வரை விலை உயர்வை சந்தித்திருக்கின்றனர். வாகனங்களுக்கான விற்பனை வரி 9 முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கர்நாடக மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com