தாம்பரம், வழியாகவே அனைத்து வெளியூர் அரசு பேருந்துகளும் கோயம்பேடு சென்றடையும்.

தாம்பரம், வழியாகவே அனைத்து வெளியூர் அரசு பேருந்துகளும் கோயம்பேடு சென்றடையும்.
Published on

தாம்பரம், குரோம்பேட்டை வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் கோயம்பேடு வரவேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம்  அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இதுவரை வெளியூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் பை பாஸ் வழியாக சென்னை கோயம்பேடு சென்றடைந்திருந்தன. இதன் காரணமாக சென்னை நகருக்குள் வரும் பயணிகள் முன் கூட்டியே பெருங்களத்தூரில் இறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கிருந்து மாற்றுப் பேருந்துகளில் அல்லது மின்சார ரயில்களில் செல்ல வேண்டிய நிலை இருந்தன.  குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி கத்திப்பாரா என இங்கே செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். எனவே பெருங்களத்தூர் வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசு பேருந்துகள் அனைத்தையும் தாம்பரம் வழியாக கோயம்பேட்டை நோக்கி இயக்கும்போது குரோம்பேட்டை, கிண்டி கத்திப்பாரா, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் வருவாயும் பெருக வாய்ப்புள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகர பகுதிக்கு வரும் மக்களுக்கு இது மிகுந்த வரவேற்பாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து கழகம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com