‘ஒருவர் செய்த தீமைகள் அனைத்தும் அவர் இறந்த பிறகு புனிதமாகி விடாது’ அண்ணாமலை கருத்துக்கு சீமான் ஆதரவு!

‘ஒருவர் செய்த தீமைகள் அனைத்தும் அவர் இறந்த பிறகு புனிதமாகி விடாது’ அண்ணாமலை கருத்துக்கு சீமான் ஆதரவு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்’ என்று மறைமுகமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அனைவராலும் அண்ணாமலையின் பேச்சுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அண்ணாமலையின் இந்தப் பேச்சு, அதிமுக பாஜக கூட்டணியையே கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது. அதையடுத்து, பாஜகவின் முன்னணி தலைவர்களும் அதிமுகவின் கண்டனக் கணைகளுக்கு பதில் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்ணைப்பாளர் சீமான் குரல் கொடுத்து இருக்கிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், அண்ணாமலையின் பேச்சு குறித்துக் கேட்டபோது, ‘ஜெயலலிதாவின் மீது தவறு இல்லையென்றால் பின் எதற்காக அவர் சிறைக்குச் சென்றார்’ என்று கேட்டு இருக்கிறார். மேலும் அவர், ‘ஒருவர் செய்த எல்லா தீமைகளும் அவர் இறந்த பிறகு புனிதம் ஆகிவிடாது’ என்று ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருக்கிறார். சீமானின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com