அனைத்து எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்!

அனைத்து எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற  தேர்தலை சந்திக்கும்!
Published on

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது அந்த கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 6 மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் பற்றியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா "இந்திரா காந்தியின் ஆட்சியில் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவற்றையெல்லாம் அவர்கள் மறந்து, இந்திராகாந்தியின் பேரனுடன் கைகோர்த்துள்ளனர். ஒருபோதும் அவர்களின் கனவு பலிக்காது. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் அமையும்" என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com