ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக இலாகா ஒதுக்கீடு.

ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக இலாகா ஒதுக்கீடு.

 மிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்களுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஆகியன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவிற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்தவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டது. ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்து துறைக்கும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் மாற்றப்பட்டிருந்தார்கள்.

மூத்த அமைச்சராக இருந்தும் பெரிதும் அதிகாரம் இல்லாத இலாகா மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.

நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைப்படுகிறது. நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார் ராஜகண்ணப்பன்.

இதனால் கடந்த சில காலமாக அமைதியாக இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக இலாகா வழங்கப்பட்டுள்ளது .

அவருக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கொஞ்சம் ஹை பட்ஜெட் துறை ஆகும்.

2024 தேர்தல் நெருங்கும் நிலையில், ராஜகண்ணப்பன் இனி உற்சாகமாக பணிகளை செய்ய வசதியாக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தென் மண்டலத்தில் இவரின் சமூகத்திற்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. தென் மண்டலத்தில் லோக்சபா தேர்தலின் போது இவரின் சமூகம் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப் போகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஓரம்கட்டப்பட்டிருந்த ராஜகண்ணப்பன் மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

அமைச்சர்களின் இலாகா மாற்றம்:

  • இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை கவனிப்பார்.

  • சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வந்தார். அந்தத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

  • அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அமைச்சர் காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com