அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிஷா பானு மற்றும் நீதிபதி பரதசக்ரவத்தி அமர்வு இன்று முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் நீடிக்கும் என்றும் அமலாக்கத்துறையினர் நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் அவரது உடல்நிலை குறித்து ஆராயலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் அமலாக்க பிரிவு காவலில் இருக்கும் போது சிகிச்சையில் இருந்த நாட்களை கணக்கில் கொள்ள கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரதான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி மாற்றப்படுகிறார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் உரிய அனுமதியின்றி சந்திக்கக் கூடாது. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே உரிய அனுமதி பெற்று தான் சந்திக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com