கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மெமோவில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சுந்தர் பிச்சை மிகுந்த மனவருத்தம் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பணிநீக்கங்கள் உலகளவில் இருக்கும் அனைத்து கூகுள் அலுவலகத்தையும் பாதிக்கும் என்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க ஊழியர்களை உடனடியாகப் பாதிக்கும் என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. கூகுள் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கத்தை ரெக்யூடிங் , கார்ப்பரேட் செயல்பாடுகள், இன்ஜினியரிங் பிரிவு மற்றும் ப்ராடெக்ட் குழுக்கள் உட்பட நிறுவனத்தின் அனைத்து பகுதிகளையும் இந்தப் பணிநீக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
ஆல்பபெட் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு அதன் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது , இந்நிறுவனத்தின் தற்போதைய பணிநீக்க அறிவிப்பு, ஏற்கனவே சரிவில் இருக்கும் தொழில்நுட்பத் துறையை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தற்போது சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய பணிநீக்க அறிவிப்பில் தொழில்நுட்ப ஊழியர்கள் அடுத்த வேலைவாய்ப்பைத் தேடும் வரையில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஹெச்1பி விசாவில் இருக்கும் ஊழியர்களுக்குப் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது 60 நாள் நோட்டீஸ் காலத்திற்கான சம்பளத்தை முழுமையாக அளிக்கப்பட உள்ளது. இதோடு சர்விஸ் பேக்கேஜ் severance package பிரிவில் 16 வார சம்பளம் மற்றும் கூகுளில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் 2 வாரம் வீதம் சம்பள தொகை அளிக்கப்பட உள்ளது.
மேலும் குறைந்தது 16 வாரங்களுக்கு GSU வெஸ்டிங்கை அளிக்கப்படும் என்று சுந்தர் பிச்சை-யின் ஊழியர்களுக்கான மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022 போனஸ் மற்றும் மீதமுள்ள விடுமுறை நேரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாத சுகாதாரம், வேலை வாய்ப்புச் சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.