மேலும், மேலும் புதிய மாவட்டங்கள் அவசியமா?

மேலும், மேலும் புதிய மாவட்டங்கள் அவசியமா?

கும்பகோணம், பழனி, கோவில்பட்டி உட்பட எட்டு புதிய  மாவட்டங்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று  அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன.  இது மேலும் மேலும்  உயர்ந்து விரைவில் 50 ஐ தொடலாம்.  புதிதாக மாவட்டங்கள்  உருவாகும் போது எங்கள் ஊரை தலைமையிடமாக கொண்டு  புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரிக்கும். புதிது புதிதாக மாவட்டங்கள் உருவாகும் போது  செலவினங்கள்  மட்டுமே அதிகரிக்கும்.  உடனடி பலன் தரும் நிதி ஆதாரங்கள் எதுவும் இருக்காது. செலவுகள் மட்டும் உயர்ந்து கொண்டே சென்றால் மாநிலத்தின் நிதிச் சுமையை அது அதிகரிக்கும். மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். திருப்பி செலுத்தும் பொறுப்புகள் (LIABILITIES) அதிகமாகும். 

 வருவாயை ஈட்டித் தரும் சொத்துக்கள் அதே நிலையில்  இருந்தால் என்ன செய்ய முடியும்.  ஆங்கிலத்தில் 'ASSET LIABILITY MANAGEMENT' என்று சொல்வார்கள். வங்கியில்  இதற்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.  அதை சரி செய்ய முடியாமல் போகும்போது வங்கிகள் தொடர் நஷ்டத்தில் இயங்க ஆரம்பிக்கும்.  வங்கிகள் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் சொத்து மற்றும் பொறுப்புகள்  நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநில அரசும் பொறுப்பு மற்றும் சொத்து  மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். இருக்கும்  சொத்துக்கள்  வருவாய் ஈட்டாத சொத்தாக (DEBT ASSET) மாறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு அவசியம். மிக மிக  முக்கியமானது உலக வங்கியிடம் வாங்கிய கடன்கள். குறித்த காலத்தில் அதை திரும்ப செலுத்த வேண்டும். ஆகவே திரும்ப செலுத்தும் தகுதியை (CAPACITY TO REPAY) அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில்  வருவாயை கோடிக்கணக்கில் அள்ளித் தருவது டாஸ்மாக்  மட்டுமே.  டாஸ்மாக் போற்றி போற்றி என்று எத்தனை  நாளைக்கு சொல்லிக்கொண்டே இருப்பது. வரி வருவாய்  மூலம் எல்லாவற்றையும் சமன்படுத்த முடியாது.  மாநிலத்தின் 

வருவாயை அதிகரிக்க புதிய சிந்தனை (INNOVATIVE THINKING)  தேவை. அது கட்டாயமும் கூட.  அதுவரையில் புதிய  மாவட்டங்கள் உருவாக்கும் எண்ணத்தை சற்று ஒத்திப்  போடலாம்.

மக்களே! உங்கள் கருத்துகளை இக்கட்டுரையின் கிழ் உள்ள Comments Sectionல் பதிவிடலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com