அதிசயம் ஆனால் உண்மை! 24 வருடங்களாக வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் மனிதர்!

அதிசயம் ஆனால் உண்மை! 24 வருடங்களாக வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் மனிதர்!

நடிகையும், டிராவல் இன்ஃப்ளூயன்ருமான ஷெனாஸ் ட்ரெஸரி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த தகவல் ஒன்று மிகுந்த ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது.

ஷெனாஸ் தனது இஸ்டா பக்கத்தில்,

‘பாலகிருஷ்ணன் எனும் இந்த 54 வயது மனிதர் கடந்த 24 வருடங்களாக வெறும் தேங்காயை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு தாகத்திற்கு இளநீர் மட்டும் அருந்திக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். தனக்கு இருந்து வந்த GERD (gastroesophageal reflux disease - இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்) நோயின் தாக்கத்தைக் குறைத்து அதிலிருந்து விடுபடவே அவர் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியதாகக் கூறுகிறார். அவருக்கு நீங்கள் எல்லோரும் ஒரு ஹார்ட்டின் சிம்பல் இட்டு உங்களது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அறிமுகப்படுத்தி இருந்தார்.’

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என்பது ஒவ்வொரு முறையும் உணவருந்தி முடித்த பின்னும் சில நிமிடங்களில் நெஞ்சில் எரிச்சலாக உணர்வோம் அல்லது அடி வயிற்றில் அமிலம் சுரந்தாற் போல ஒருவித எரிச்சல் ஏற்படுவோம். அது தொண்டை வரையிலும் கூட உணரப்பட கூடும். இந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்றாலும், உடனே அது நெஞ்செரிச்சலில் கொண்டு விடுமோ என்று பயமாகவே இருக்கும்.

அதனால் வரும் முன் காப்போம் எனும் விதமாக வாரத்தில் மூன்று முறை இதே போல நெஞ்செரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பிறகு வயிற்றில் எரிச்சலாக உபாதை ஏற்பட்டாலோ உடனடியாக இரைப்பை மற்றும் உணவுக்குழாய் சிறப்பு மருத்துவரை அணுகி உரிய மருத்துவ சிகிச்சை அறிவுரைகளைப் பெற்றுக் கொள்வது நலம் அளிக்கக் கூடும்.

இங்கு பால கிருஷ்ணனின் ’கோகனட் ஒன்லி’ டயட் உணவு முறையைப் பொருத்தவரை இணையத்தில் இதை அறிந்து கொள்ள நேர்ந்தவர்கள் அனைவருக்குமே இது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளிப்பதாகவும், அதெப்படி முடியும்? வெறும் தேங்காயைச் சாப்பிட்டு விட்டு வேறு எதையுமே உண்ணாமல் ஒரு மனிதனால் எப்படி தொடர்ந்து 24 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமாம்?! சாத்தியமே இல்லை என்று சிலருக்கு சந்தேகத்தையும் அளிக்க வல்லதாக இருக்கிறது இந்தச் செய்தி. ஷெனாஸின் தகவல் இவ்வளவு தான்.

இதன் சாத்தியங்களைப் பற்றி கேஸ்ட்ரோ எண்டாலஜிஸ்ட் சிறப்பு மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் தான் சாத்தியமான பதில்களைக் கூற முடியும். அப்படிப் பட்ட பதில்களுக்காக இணையத்தில் தேடிப் பார்த்ததில் சிலர் இதைச் சாத்தியம் என்கிறார்கள். சிலர் சாத்தியமில்லை என்கிறார்கள்.

‘வெறும் தேங்காயும், இளநீரும் சாப்பிட்டுக் கொண்டு சில வாரங்களைச் சமாளிக்கக் கூடும். ஆனால் வருடக்கணக்காக அதைப் பின்பற்றினால் எளிதில் ஹார்ட் அட்டாக் தாக்க அதிக வாய்ப்பிருப்பதாக ஒரு மருத்துவர் தெரிவித்திருந்தார் - இது ஒரு கருத்து.

வேறொருவர் கூறுகிறார்.

தேங்காயில் குறைந்த அளவில் கார்போ ஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. ஆனால் மிகுதியான அளவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் மனிதர்கள் தாரளமாக அவற்றைச் சாப்பிட்டு விட்டு தங்களது உடலுக்குத் தேவையான சத்த்துக்களைப் பெற முடியும். - என்கிறார்.

எது எப்படியோ பாலகிருஷ்ணன் தற்போது பல ஆண்டுகளாகத் தன்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இரப்பைக் குழாய் எரிச்சல் நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பதாகத் தெரிகிறது. அது தானே முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com