சொமேட்டோ, ஸ்விகிக்கு போட்டி; உணவு டெலிவரியில் அசத்தும் ரோபோக்கள்!

ரோபோக்கள்
ரோபோக்கள்
Published on

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வீடுகளுக்கு உணவு கொண்டு செல்லும் சர்வீசில் ரோபோக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. முழங்கால் அளவு உயரம் கொண்ட இந்த நூற்றுக்கணக்கான சிறிய ரோபோக்கள், பீட்ஸா, பர்கர் என்று உணவுவகைகளை சுமந்துகொண்டு மற்ற வாகனங்களுக்கு இணையாக விரைந்து செல்கின்றன.

இந்த ரோக்களை உருவாக்கியுள்ள ஸ்டார்ஷிப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலஸ்டர் வெஸ்ட்கார்த் கூறியதாவது:

உலகில் ரோபோ பயன்பாட்டிற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இப்போதைக்கு உணவு டெலிவரி சர்வீசில் 1,000-க்கும் மேற்பட்ட ரோபோக்களைக் தயாரித்துள்ள்ளோம்.

தற்போது 20 அமெரிக்க வளாகங்களில் எங்கள் ரோபோக்கள் உணவு விநியோகம் செய்து வருகின்றன. மேலும்  25 உணவு வளாகங்களில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப் படவுள்ளன.

இதுதவிர இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடைபாதைகளிலும், மொடெஸ்டோ, கலிபோர்னியா மற்றும் நிறுவனத்தின் சொந்த ஊரான டாலின், எஸ்டோனியா போன்ற பகுதிகளிலும் இந்த ரோபோக்கள் வலம் வருகின்றன.

இந்த ரோபோக்கள் அனைத்தும் கேமராக்கள், சென்சார்கள், ஜிபிஎஸ் முறையில் இயங்குகின்றன. சில சமயங்களில் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி நடைபாதைகளில் செல்லவும் மற்றும் தெருக்களை அடையாளம் காணவும் பயன்படுத்துகிறது. இந்த ரோபோக்கள் அனைத்தும் 5 மைல் வேகத்தில் நகரும்.

-என்று அவர் தெரிவித்தார்.  மேலும் ஒரே நேரத்தில் பல ரோபோக்களில் கட்டுப்படுத்தும் வகையில் ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஆபரேட்டர்கள் மூலமாக செயல்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் கிடைக்க பெற்ற குறியீட்டு எண்ணை டைப் செய்தால், ரோபோவின் மூடி திறக்கப்படும். அதிலிருந்து தாங்கள் ஆர்டர் செய்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com