அமேசான் நிறுவனத்தில் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமேசான் நிறுவனத்தில் 9,000 ஊழியர்கள்  பணிநீக்கம்!
Published on

உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூறியுள்ளது.

அமேசான் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பொருளாதார சூழல் சரியில்லாததை காரணம் காட்டி அடுத்த சில வாரங்களில் கூடுதலாக 9000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதை என அறிவித்துள்ளது

பணிநீக்கம் குறித்து ஜாஸ்ஸி அவர்கள் சென்ற ஆண்டு நவம்பர் மாதமே ஒரு விளக்கம் அளித்தார் அதில் நிறுவனம் தொடர்ந்து கடினமான பொருளாதார சரிவை எதிர்கொள்வதால், 2023 ஆம் ஆண்டில் பணியாளர்களை அதிக அளவில் பணிநீக்கம் செய்யும் என்றும் எச்சரித்திருந்தார்.

அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கையில், பெரும்பாலானவர்கள், அலெக்ஸா வாய்ஸ் அஸிஸ்டென்ட் தொடர்பாக பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனை பிரிவை சார்ந்தவர்கள், மனிதவள பணியாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையில் இந்த மாதம் ஒன்பதாயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். இதுதான், அமேசான் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது

கடந்த சில காலங்களாக அமேசான் நிறுவனத்தின் வருவாயில் பெரிதாக லாபமில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அதன் செலவுகளை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் ஏற்கெனவே சுமார் 18,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு திட்டமிட்டு ஜனவரி மாதம் இந்தியா உட்பட உலக நாடுகளில் பணிநீக்கம் செய்தது.

அமேசான் நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடலின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் நிறைவடைந்ததாகவும், அதுவே கூடுதல் பணநீக்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் அமேசான் நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார். ஆனால், அமேசான் வேறு பிரிவுகளில் புதியவர்களை பணியமர்த்த இருப்பதாவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com