அம்பாசமுத்திரத்தில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

அம்பாசமுத்திரத்தில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 5 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய காவல்துறை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய , 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும் காவல் அதிகாரி பல்வீர் சிங்கை கைது செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாரியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதேபோல் மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நெல்லை மாவட்ட எஸ்.பி யாக இருந்த சரவணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வீர் சிங்கிடம் மனித உரிமைகள் ஆணையம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன் மற்றும் இரண்டு தனிப்படை காவலர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com