ஆம்பூர் அருகே அதிமுகவைச் சேர்ந்தவரிடம் ரூ.3.06 லட்சம் பறிமுதல்..!!

ambur admk candidate
ambur admk candidate
Updated on

ஆம்பூர் அருகே பாலூரில் அதிமுகவை சேர்ந்தவரிடம் ரூபாய் 3.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள பாலூர் பகுதியில் இன்று தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிகாலையில் நடத்திய சோதனையில் பொது இடத்தில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஆம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடமிருந்து 3.06 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ரஞ்சித்தை ஆம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தள்ளனர். காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். 

logo
Kalki Online
kalkionline.com