ஏலியன்கள் குறித்த உண்மையை மறைத்த அமெரிக்கா. விசாரணையில் வெளிவந்த ரகசியங்கள்!

ஏலியன்கள் குறித்த உண்மையை மறைத்த அமெரிக்கா. விசாரணையில் வெளிவந்த ரகசியங்கள்!
Published on

பூமியில் ஏலியன்களின் வாகனங்களாக சொல்லப்படும் UFO-க்கள் இருப்பது உண்மை என சமீபத்தில் அமெரிக்கா நடத்திய பிரதிநிதிகள் சபை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் வெளிவந்துள்ளது. 

ஏலியன்களின் வாகனங்கள் என அழைக்கப்படும் UFO குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்தது. நேற்று இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,

  1. அமெரிக்காவிடம் UFO-க்கள் இருப்பது உண்மைதான். பல வாகனங்கள் இன்றளவும் உடையாத நிலையில் இருக்கிறது. அதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

  2. பல இடங்களில் அமெரிக்கர்கள் அந்த வாகனங்களைத் தாக்கியுள்ளனர். மேலும் பல UFO வாகன மாடலைப் பார்த்து ரிவர்ஸ் இன்ஜினியரிங் முறையில் அதை மறு உருவாக்கம் செய்யவும் முயன்றுள்ளனர். 

  3. இந்த வாகனங்கள் எதுவும் பூமிக்கு சொந்தமானது இல்லை. இந்த வாகனங்கள் மனிதர்களாலும் உருவாக்கப்படவில்லை. 

  4. இந்த உண்மையை வெளியே சொல்ல முயன்ற பலரும் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். 

  5. உலகம் முழுவதிலும் பல இடங்களில் இதுபோன்ற வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அலாஸ்கா கடல் பகுதியில் ஒரு சில காலங்களுக்கு தினசரி இந்த வாகனங்களின் செயல்பாடு தொடர்ந்து இருந்தது. அதன் பிறகு அவற்றை அமெரிக்க கைப்பற்றிவிட்டது என அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். 

இதுவரை இது போன்ற பறக்கும் தட்டுகளை மக்கள் பார்த்ததை அமெரிக்கா மறுத்து வந்த நிலையில், கடந்த 2020இல் UFO இருப்பது உண்மைதான் என முதல் முறை ஒப்புக்கொண்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோவை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டது. அந்த வீடியோவில் பறக்கும் தட்டு போல இருக்கும் ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டிருந்தது. 

முதலில் மெதுவாக செல்லும் அந்த வாகனம் சில நிமிடங்களில் வேகமாக பறந்து மறைந்துவிட்டது. UFO வாகனங்கள் இருக்கிறது என அமெரிக்கா ஒப்புக்கொண்டாலும் இது வேற்றுகிரக வாசிகளுடையது என யாரும் தெரிவிக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com