செயற்கை முறையில் கோழி விற்பனை.. அமெரிக்கா அனுமதி!

செயற்கை முறையில் கோழி விற்பனை.. அமெரிக்கா அனுமதி!

செயற்கையாக தயாரிக்கப்படும் கோழிகளை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. இவை எப்படி தயார் செய்யப்படுகின்றன. ஏன் செயற்கை இறைச்சி கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

சாமானிய மக்கள் தொடங்கி, உடற்பயிற்சி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தேவை புரத சத்து. மீன், முட்டை என பல வகைகளில் இருந்து புரத சத்து கிடைத்தாலும், பெரும்பாலும் கோழி இறைச்சியில் இருந்து தான் இந்த புரத சத்து மக்களால் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், கோழிகளை கொல்லாமல், கத்தியும் ரத்தமும் இல்லாமல், கோழிகளில் இருந்து கிடைக்கும் புரதத்தை எப்படி பெறுவது என்று தோன்றிய எண்ணதால் உருவானது தான் செயற்கை கோழி இறைச்சி.

இந்த செயற்கை இறைச்சி என்பது, கோழியின் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப் பொருள்களைக் கலந்து ஆய்வு கூடங்களில் தயாரிக்கப்படுகிறது. இதில், கோழிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை இறைச்சியாக மட்டுமே இருக்கும். மாறாக ரத்தம் உள்ள உயிருள்ள கோழிகள் உருவாக்கப்படுவதில்லை. இதை தான் வளர்ப்பு இறைச்சி என்று குறிப்பிடுகிறார்கள்.

உலக அளவில் சிங்கப்பூரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை கடைகளில் விற்பனை செய்ய அமெரிக்காவும் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில், Upside Foods மற்றும் Good Meat ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த செயற்கை இறைச்சிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை மனிதர்களின் உணவு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்ற அனுமதியை அமெரிக்க விவசாயத்துறை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகரித்து உள்ளது.

ஆய்வகங்களில் தயார் செய்யப்படுவதால், இதன் விலை உயிருள்ள கோழிகளை விட அதிகம். ஆகையால், இந்த வகை செயற்கை இறைச்சிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உயர் ரக உணவகங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

தற்போதைய நிலையில், வாரத்திற்கு 4 ஆயிரம் கிலோ கோழி இறைச்சி உணவுகள் விற்பனை ஆகும் உணவகங்களில் 3 கிலோ செயற்கை இறைச்சி மட்டுமே விற்பனை ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 300 மில்லியன் டன் கோழி இறைச்சி உட்கொள்ளப்படும் நிலையில், செயற்கை இறைச்சியின் உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்தால் மட்டுமே இதன் விற்பனை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை கோழி இறைச்சிக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், மாடு, பன்றி என அனைத்து வகை இறைச்சிகளையும் செயற்கையாக தயாரிக்கும் முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. 2012ம் ஆண்டு

ஒரு பர்கரில் வைக்கும் அளவிற்கு பன்றி இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டது. ஆனால் அது கடைசியாக ஒரு முழுமையாக HAMBURGER ஆக உருவெடுத்த போது அதன் விலை என்ன தெரியுமா? 3 லட்சத்து 25 ஆயிரம் டாலர். அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 2 கோடி ரூபாய்.

இயற்கையாக கோழிகள் இருக்கும் போது எதற்கு செய்ற்கை இறைச்சி என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால், அதற்கு கொடுக்கப்படும் பதில் என்ன தெரியுமா? இது ஒரு ECO FRIENDLY PRODUCT. அதாவது சுற்றுசூழலை பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்திற்கும் இது அவசியம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com