இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்!

இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்!
Published on

மெரிக்க செனட் சபையில் மூன்று சக்தி வாய்ந்த தீர்மானங்களை அந்நாட்டு எம்.பி.க்கள் நேற்று அறிமுகப்படுத்தினர். அதில் ஒன்று, ‘இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப் பிரதேசம். அங்கே சீனா தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் அத்துமீறல்களைச் செய்கிறது. சீனாவின் இந்த அத்துமீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் அனைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளையும் இந்த சபை பாராட்டுகிறது. சீனாவின் இந்த அத்துமீறல்களை இந்த சபை கண்டிப்பதோடு, இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய நேர்மையையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லையில் சீனா இரண்டு கிராமங்களை உருவாக்கியுள்ளது மற்றும் மீண்டும் மீண்டும் சர்ச்கைகளைத் துண்டும் விதமாக அந்நாடு செய்யும் அத்துமீறல்களையும் அடாவடித்தனத்தையும் அமெரிக்கா கண்டித்துள்ளது.

ஜெஃப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகிய மூவர் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதாகவும், உறுதி அளிப்பதாகவும் இருந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபையில் சீனாவைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதோடு, ‘சர்வதேச பிரச்னைகளில் இந்தியாவுக்கு பல்முனை ஒத்துழைப்பு தருவோம்’ என்று குவாட் மாநாட்டின் மூலம் அமெரிக்கா உறுதியேற்று உள்ள நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது உலகத் தலைவர்களால் மிகவும் கவனமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நிறைவேற்றி உள்ள இந்த தீர்மானத்துக்கு சீனா தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த அரிதான தீர்மானம் உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com