அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி...ஏன் தெரியுமா?

விவேக் ராமசாமி
விவேக் ராமசாமி

மெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அத்துடன், தான் அதிபராக வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தார்.

இதனால், விவேக் ராமசாமியின் பெயர் உலகளவில் பிரபலமானது. குறிப்பாக அவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பவதால், விவேக் ராமசாமி தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வைரல் வீடியோக்கள் கவனம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,  இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 37) உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் முதலில் தங்கள் கட்சியின் சார்பில் அதிபர் போட்டியிடும் நபருடன் போட்டியிடவேண்டும்.

அந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் தான் இறுதிபோட்டியில் அவர்களால் செல்ல முடியும்.  இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.  குடியரசுக் கட்சியின் டோனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தான் வாபஸ் பெறுவதாகவும் தனது கட்சியைச் சேர்ந்த டோனால்ட் டிரம்பை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில் அயோவா தேர்தலில் வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த வாக்கு அடிப்படையில் முடிவில்தான் விவேக் ராமசாமி தற்போது அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com