அமெரிக்க வரலாற்றில் முதன் முறை: கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு!

அமெரிக்க வரலாற்றில் முதன் முறை: கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறித்த நாணயத்தை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் மாயா ஏஞ்சலோ பிரபலமான கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். இவர் கடந்த 1969-ம் ஆண்டு "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்" என்கிற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்து தன்மீது காட்டப்பட்ட இனவெறி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவற்றிலிருந்து தான் மீண்டு வந்து எழுத்துலகில் சாதித்தது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார். இந்த புத்தகத்தின் மூலம் மாயா ஏஞ்சலோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது 86 வயதில் காலமானார்.

இந்த நிலையில் மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

logo
Kalki Online
kalkionline.com