அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ஆயுதம் வழங்கும் – ஜோ பைடன்!

Joe Biden
Joe Biden
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பல வருடங்களாக ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வரும் நிலையில், தற்போது மேலும் ஆயுதங்களை வழங்கி உதவி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல காலமாக போர் நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து, ரஷ்யாவிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை, கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ரஷ்யாவின் பலம்வாய்ந்த தாக்குதல்களிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது. இதற்கு பீரங்கி பற்றாக்குறையே காரணம். இதன் காரணமாகத்தான், அமெரிக்கா தற்போது பல உதவிகளை செய்து வருகிறது.

நேற்று நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது. நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாநாட்டில் பங்கேற்றார்

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,

”வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன. நாங்கள் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, போரில் உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படும்.

இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் புதினின் விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போரில் 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் பலியாகினர்.

போர் தொடங்கியபோது 5 நாட்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்று அவர் (புதின்) நினைத்தார். 2½ ஆண்டுகள் கழித்து இன்னும் நிற்கிறது, தொடர்ந்து நிற்கும். இந்த போருக்கு முன், நேட்டோ உடைந்து விடும் என்று புதின் நினைத்தார் என்பது அனைத்து நட்பு நாடுகளுக்கும் தெரியும்.

இதையும் படியுங்கள்:
22 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒருவரின் உடல் பெருவில் கண்டெடுப்பு!
Joe Biden

இன்று, நேட்டோ அதன் வரலாற்றில் இருந்ததை விட பலமாக உள்ளது. இந்த அர்த்தமற்ற போர் தொடங்கிய போது, உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. இன்றும் அது சுதந்திர நாடாகவே உள்ளது. இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது. உக்ரைனே வெற்றி பெறும். உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்”. என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com