பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வென்ற அமெரிக்கர்கள்!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

கடந்த சில நாட்களாக நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் இணையத்தையும் , உலக மக்களையும் பரபரப்பாக்கி வரும் நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபிரட் நோபல் நினைவாக அளிக்கப்படும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்த வருடம் வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்து ஆய்வுக்கு வழங்கப்பட்டு உள்ளது என நோபல் பரிசு அளிக்கும் கமிட்டி அறிவித்துள்ளது.

பென் எஸ்.பெனான்கே,டக்ளஸ் டபிள்யூ. டைமண்ட்,பிலிப் எச்.டிப்விக்
பென் எஸ்.பெனான்கே,டக்ளஸ் டபிள்யூ. டைமண்ட்,பிலிப் எச்.டிப்விக்

இந்த வருடம் பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்துச் செய்த ஆராய்ச்சிக்காக ப்ரூக்கிங்ஸ் அமைப்பைச் சேர்ந்த பென் எஸ்.பெனான்கே ( Ben S.Benanke) , சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் டபிள்யூ. டைமண்ட் (douglas W.Diamond) , வாஷிங்கடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் எச்.டிப்விக் (Philip H.Dybvig )ஆகிய மூவருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது,

இதில் மூன்று பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவர்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் நிதி நெருக்கடிகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை மேம்படுத்தியது என்பதற்க்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com