மணிப்பூரில் கடந்த நான்கு நாட்களில் எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதல்வர் பீரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிதாக ஏற்பட்ட வன்முறைக்கு 5 பேர் பலியானார்கள். தவிர 12 பேர் காயமடைந்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகள் தலைதூக்கியது, மற்றும் புதிய வன்முறை காரணமாக நிலைமைய ஆராய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த முறை நடந்த வன்முறை, கலவரத்துக்கு 73 பேர் பலியானார்கள். மேலும் 200-க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 30,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறை, பதற்றங்கள் ஓரளவு தணிந்தாலும் இனமோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் பாயேங் என்னுமிடத்தில் ஆயுதம் ஏந்தி குக்கி தீவிரவாதிகள் சுட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். கக்சிங் மாவட்டம் சுகுனுவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் தவிர மேலும் மேலும் மூவர் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. கிராமப் பகுதி மக்கள் ராணுவத்தை உள்ளே நுழையவிடாமல் தடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிபோக் என்னுமிடத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுமணி சிங் என்பவர் வீட்டை மெய்டீஸ் வகுப்பைச் சேர்ந்த ஒரு கும்பலினர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே இம்பால் மற்றும் விஷ்ணுபூரில் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்துள்ளது. சுக்னு, காங்வி, காங்சுப், சகோல்மாங், நுங்கோய்போப்கி, விஷன்பூர், குர்குல் ஆகிய பருதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்த்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கக்சிங் மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள், மெய்டீர் வகுப்பினர் 80 பேரின் வீடுகளை தீவைத்து கொளுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் தீவிரவாதிகளுக்கு போலீசார் தக்க பதிலடி கொடுத்தனர். தீவிரவாதிகளுக்கு போலீஸாருக்கும் கடும் சண்டை நடந்ததாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
யாயின்காங்போக்பி, செக்மாய், பொகாசாவோ இகஹாய், டோர்பங், காங்வி ஆகிய பகு மெய்டீஸ் சமூகத்தினரின் வீடுகளுக்கு ஆயுதமேந்திய குக்கி தீவிரவாதிகள் தீவைத்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.