2024லிலும் பா.ஜ.க.வுக்கே வெற்றி! : அமித் ஷா!

அமித்ஷா
அமித்ஷா
Published on

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை வென்று சாதனை படைத்துள்ளது. குஜராத் பாஜகவின் கோட்டை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

(குஜராத் தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வென்று பா.ஜ.க. சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.)

சூரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பேசினார்.

"இந்த தேர்தலில் புதிதாக சில கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து களத்தில் குதித்தன. ஆனால், அவைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. குஜராத் தேர்தல் வெற்றி நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியலில் மாற்றம் ஏற்படும். இது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் முதல் பூத்கமிட்டி வரை அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக முதல் பூபேந்திர படேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள மக்கள், குறிப்பாக குஜராத் மக்களிடையே பிரதமர் மோடிக்கு பலத்த ஆதரவு இருக்கிறது. அதனால்தான் மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை 26 இடங்களையும் கைப்பற்றியது.

குஜராத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டதை அடுத்து அங்கு பா.ஜ.க. அலை எழுந்தது. அதை தொண்டர்கள் எளிதில் வாக்குகளாக மாற்றிவிட்டனர்.

குஜராத்தில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களில் பா.ஜ.க. அதிகம் கவனம் செலுத்தியது. வெளிப்படைத்தன்மைக்கும், ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்துக்கும் உதாரணமாக குஜராத் திகழ்கிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். மேலும் வளர்ச்சிக்கான புதிய பாதையையும் உருவாக்க முடியும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com