ரயில் நிலையங்களை நவீனப்படுத்த ‘அமிர்த் பாரத்’ திட்டம்!

அமிர்த் பாரத் திட்டம்
அமிர்த் பாரத் திட்டம்
Published on

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீனப்படுத்த அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

-இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

நாட்டிலுள்ள ரயில் நிலையங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்தும் வகையில் ‘அமிர்த் பாரத்’ திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில், அவர்களுக்கான வசதிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களின் மேல் தளங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்பது போன்ற குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இத்திட்டத்தில் அடங்கும். ரயில் நிலையங்களில் தற்போதுள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களில் அதிகாரிகளுக்கான ஆய்வு அறைகள், தகவல் பலகைகள், ஊனமுற்றோருக்கான வசதிகள் போன்றவை உறுதி செய்யப்படும். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் தங்குமிடம், நடைமேடைகள், ஓய்வு அறைகள், போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

-இவ்வாறு மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com