
ஒரு காலத்துல, "அம்டெக் ஆட்டோ"ங்கிற கம்பெனி இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புல பெரிய ஆளா இருந்துச்சு.
அவங்க வருமானம் கிட்டத்தட்ட 635 மில்லியன் டாலர். இந்தியாவை ஆட்டிப்படைச்ச மார்க்கெட் லீடரான "பாரத் ஃபோர்ஜ்" கூட போட்டி போட்டுச்சு. ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட், சுஸுகி என உலக ஜாம்பவான்களுக்கெல்லாம் சப்ளை செஞ்சாங்க.
ஆனா, பத்து வருஷத்துக்குள்ளயே அந்த வெற்றி கதை அப்படியே தலைகீழாச்சு. 2015-16 நிதியாண்டின் கடைசி காலாண்டுல, கம்பெனிக்கு ₹529 கோடி நஷ்டம்.
அப்போ Amtek ஆட்டோ-வோட ஓனர் அர்விந்த் தாம், ஒரு பெரிய கனவுல இருந்திருக்காரு. ஏற்றுமதி பிசினஸ்ல பெரிய லாபம் வந்ததால, இன்னும் நிறைய முதலீடு செஞ்சு கம்பெனியைப் பெருசாக்கலாம்னு ஆக்ரோஷமா கிளம்பிருக்காரு. ஆனா, அவர் எதிர்பார்த்த வளர்ச்சி வராததால, கம்பெனிக்கு ₹19,000 கோடி கடன் மலை மாதிரி சேர்ந்துடுச்சு.
கதை இங்கேதான் சூடு பிடிக்குது!
வங்கி அதிகாரிங்க எல்லாம் சேர்ந்து, "ஒரு வழியா கம்பெனியை காப்பாத்திடலாம்"னு நிதி கொடுத்திருக்காங்க.
ஆனா, அர்விந்த் தாமுக்கு பிசினஸை நடத்தறதுல ஆர்வம் இல்லையாம். அதற்குப் பதிலா, அந்தப் பணத்தை எல்லாம் அவர் தனிப்பட்ட பயன்பாட்டுக்கும், ரியல் எஸ்டேட் வாங்கவும் பயன்படுத்திட்டாராம்.
மொத்தமா வங்கியிடமிருந்து ₹26,000 கோடி கடன் வாங்கி, வட்டியோடு சேர்த்து அது ₹33,000 கோடியா மாறியிருக்கு. இதுதான் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய வங்கி மோசடின்னு அமலாக்கத்துறை (ED) சொல்லுது.
ED-யோட புலனாய்வுல, இந்த மோசடி எப்படி நடந்துச்சுன்னு ஒரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது.
அரவிந்த் தாம், கிட்டத்தட்ட 500 போலி நிறுவனங்களை (Shell companies) ஒரு வலைப்பின்னல் மாதிரி உருவாக்கி, ₹26,000 கோடியை பல அடுக்குகள்ல பிரிச்சு டைவர்ட் பண்ணியிருக்கார்.
இந்த கம்பெனிகளுக்கு எந்த பிசினஸும் கிடையாதாம். எல்லாமே ரியல் எஸ்டேட் சொத்துக்களை மட்டும் வச்சிருக்குதாம்.
அதுலயும் ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இந்த 500 நிறுவனங்களுக்கு டைரக்டர்களா இருந்தவங்க யாருன்னு பார்த்தா,நம்ம கண்கள் வியப்பால விரிஞ்சு போகுது.
12-வது படிச்ச ஒரு ஆபீஸ் அசிஸ்டெண்ட் 87 கம்பெனிகளுக்கு டைரக்டரா இருந்திருக்கார்.
10-வது படிச்ச ஒரு மெக்கானிக் 37 கம்பெனிகளுக்கும்,
9-வது படிச்ச ஒரு கார் டிரைவர் 24 கம்பெனிகளுக்கும் டைரக்டரா இருந்திருக்கார்.
அப்புறம், இந்த 500 கம்பெனிகளுக்கு ஆடிட் பண்ண சில ஆடிட்டர்கள ED விசாரிச்சிருக்கு. அப்போ ஒரு ஆடிட்டர், "நான் கிட்டத்தட்ட 151 கம்பெனிகளோட நிதிநிலைகளை ஆடிட் பண்ணாமலே கையெழுத்து போட்டுட்டேன்.
என்னைய இன்னொரு ஆடிட்டர்தான் இந்த வேலைக்கு இழுத்தாரு"ன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கார். இதுபோல இன்னும் சில ஆடிட்டர்களும் மோசமான ஆடிட்டிங் செஞ்சத சொல்லியிருக்காங்க.
வழக்கின் தற்போதைய நிலவரம் என்ன?
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்துல இருக்கு. இந்த மாதம், டெல்லி உயர்நீதிமன்றம் அர்விந்த் தாமுக்கு ஜாமீன் மறுத்திருக்கு. அதுமட்டுமில்லாம, போன வருஷம் டிசம்பர்ல, அவருடைய கைது சட்டவிரோதமானது இல்லைனு தீர்ப்பு சொல்லியிருக்கு.
இந்த வழக்கைப் பத்தி நீதிபதி ரவீந்தர் துடேஜா, ஆகஸ்ட் 19 அன்னைக்கு தன்னோட தீர்ப்புல, "விண்ணப்பதாரர் (அர்விந்த் தாம்) மீதான குற்றச்சாட்டுகள், இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கும் அளவுக்கு மிக மோசமான பொருளாதாரக் குற்றம்.
இது பொதுத்துறை வங்கிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கு. இந்த மாதிரி குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" அப்படின்னு அழுத்தமா சொல்லியிருக்கார்.
அதேபோல, IDBI வங்கி கொடுத்த இன்னொரு புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. கடந்த ஜூலை 30 அன்னைக்கு அர்விந்த் தாம் மேல ஒரு வழக்குப் பதிவு பண்ணியிருக்கு.
இந்த விவகாரம் குறித்து தி பிரிண்ட் செய்தி நிறுவனம், தாமுவின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டபோது, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மொத்தத்துல, இந்த வழக்கு இன்னும் பல ரகசியங்களை வெளிய கொண்டுவரும்னு எதிர்பார்க்கலாம்.
இந்த மாதிரி மோசடிகள் நம்ம பொருளாதாரத்தையே சீரழிக்குது. இந்த கேஸ்ல அடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்க மக்கள் காத்துட்டு இருக்காங்க.