தமிழ்நாடு முழுவதும டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் கூடுதல் கட்டணத்திற்கு எதிராக கேள்வி எழுப்பியவரை நேற்று காவல்துறை ஊழியர் தாக்கும் வீடியோ ஒன்றை பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அப்பாவி வாடிக்கையாளர் தாக்கப்படும் வீடியோ, வைரலாகியிருக்கிறது. இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில் மதுபான வகைகளுக்கு கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக ஒருவரை காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் செயல் என்பது அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளை எதிர்த்து பா.ம.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை தற்போது கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்பவர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பங்களை தடுக்க ஒரே வழி, டாஸ்மாக் கடைகளை மூடுவதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுவுக்கு அடிமையான அனைவரும் அப்பழக்கத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. அதே நேரத்தில் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதையும், அதை எதிர்த்து கேள்வி எழுப்புவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது. அனைத்து மதுக்கடைகளையும் அடுத்த இரு ஆண்டுகளில் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிவிட்டர் வாயிலாக அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
டாஸ்மாக் கடைகள் திறப்பு, கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விஷயங்கள் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அமைச்சர் விளக்கம் தருவார் என்று கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.