#BIG NEWS : ராமதாஸ் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்த அன்புமணிக்கு தடை..!!

Anbumani banned For using Ramadoss Picture
Anbumani And Ramdosstwitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் புகைச்சல் நிலவி வருவது அனைவரும் அறிந்தது தான். பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி தலைமையில் செயல்பட்டு , சட்டமன்றத் தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. அதே நேரம் ராமதாஸ் தரப்பு , அய்யா பாமக என்ற பெயரில் தனித்து இயங்கி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திருமதி.சசிகலா உடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளது.

அன்புமணி – ராமதாஸ் பிரிந்தாலும் , தேர்தல் களத்தில் பாமகவினர் ராமதாஸின் பெயரையும், படங்களையும் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர், ராமதாஸ் தரப்பில் இருந்து , அன்புமணி தனது படங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று மாலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் , நீதிபதி ராமதாஸ் புகைப்படங்களை அன்புமணி தரப்பில் பயன்படுத்துவதற்கு தடைவிதித்தார். வழக்கின் அடுத்த கட்டம் விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com