குடிநீர் மற்றும் கழிவு நீர் புகாரா? இதை படிங்க முதலில் ...

கழிவு நீர்
கழிவு நீர்
Published on

சென்னை குடிநீர் வாரியம், 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வாயிலாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்கிறது.

ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் ஒருபக்கம் இருந்தாலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறையின்றி பூர்த்தி செய்கிறது.

சென்னையில், 7.82 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர், கழிவு நீர் புகார்களுக்கு, அந்தந்த வார்டு குடிநீர் வாரிய பொறியாளர்கள், பகுதி பொறியாளர்களிடம் புகார் அளிக்கலாம்.

வீட்டில் இருந்தே புகாரளிக்கும் வகையில், 044 -4567 4567 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில், 20 இணைப்புகள் உள்ளன. அல்லது கட்டணமில்லாத '1916' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்.

மேலும், www.chennaimetrowater.tn.gov. in என்ற இணையதளம் வாயிலாகவும் புகாரளிக்கலாம்.

water system
water system

பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு, புகார் பதிவு எண், மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதேபோல், சம்பந்தப் பட்ட வார்டு உதவி பொறியாளருக்கு, புகார் குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

புகார்களை சரி செய்தோ அல்லது பிரச்னைக்கான தீர்வையோ, உதவி பொறியாளர் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மீண்டும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, புகார் கூறியவரை தொடர்பு கொண்டு, நடவடிக்கை விபரத்தை தெரிவித்து ஒப்புதல் பெற்றபின், புகார் மனு முடித்து வைக்கப்படும்.

குடிநீர், கழிவு நீருக்கான வரி மற்றும் கட்டணத்தை ரொக்கம், காசோலை, வரைவோலை வழியாக, பொதுமக்கள் செலுத்துகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் 'ஆன்லைன்' வழியாக, வரி செலுத்தும் வசதி துவக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன், 'க்யூஆர் கோடு உருவாக்கப்பட்டு, அதை 'ஸ்கேன்' செய்து வரி செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இதே போன்று புகார் அளிப்பதையும் எளிமையாக்க, 'க்யூஆர் கோடு' வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

குடிநீர் வாரிய வார்டு அலுவலகம், மண்டலம் வாரியாக உள்ள பகுதி அலுவலகம் மற்றும் வரி செலுத்தும் மையம் என, 300 இடங்களில், இந்த 'க்யூஆர் கோடு' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதை ஸ்கேன் செய்து, புகாரைப் பதிவு செய்து, துரித நடவடிக்கை பெற முடியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com