புதுப்பொலிவு மேம்பாட்டோடு திகழப்போகும் அந்தமான் நிக்கோபர் தீவுகள்: ஒன்றிய அரசு திட்டம்!

புதுப்பொலிவு மேம்பாட்டோடு திகழப்போகும் அந்தமான் நிக்கோபர் தீவுகள்: ஒன்றிய அரசு திட்டம்!
Published on

ந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு அதைப் புதுப்பொலிவோடு திகழச் செய்யும் முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தத் தீவுகள் விரைவில் ஒரு பெரிய மாற்றத்தைப் பெறவிருக்கின்றன. இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கூட்டுவதற்கு வழிவழிகளை ஆராய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இந்தத் தீவுகளை மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் போன்று சுற்றுலாப் பகுதிகளாக மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மர வீடுகள், கடற்கரை குடில்கள், முகாம் வசதிகள், சதுப்புநில விளக்க மையம் உருவாக்குதல், ஆமை கண்காணிப்பு மையத்தை உருவாக்குதல் போன்றவை இந்த பிராந்தியத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் ஆகும். இவை தவிர, பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உள்ளூர் மக்களின் திறன்களை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டம் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ‘இந்தத் திட்டங்கள் INR 650 கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறி உள்ளார். இந்தத் திட்டத்துக்காக தற்போது ​​ஐந்து தீவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பின்னர் பன்னிரெண்டு தீவுகள் அதனோடு சேர்க்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட முப்பது தீவுகளுக்கு அனுமதியில் விலக்கு அளிக்கப்பட உள்ளது. நீர் விளையாட்டுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. இதனால் நீர் விளையாட்டுத் தொழில் மேம்படும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் UDAN பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் நான்கு இடங்களில் கடல் விமானச் செயல்பாடுகளுக்கான ஏலமும் திறக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கு விடுமுறையைத் திட்டமிடவும், நீருக்கடியில் வாழ்வின் அழகை ஆராயவும், வெள்ளை மணல் கடற்கரைகளில் ஓய்வு நேரத்தை செலவிடவும் இது நிச்சயமாக வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com