ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ஆஸ்பத்திரியில் அனுமதி!

ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ஆஸ்பத்திரியில் அனுமதி!

ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவின் ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக ஷர்மிளா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காக தெலுங்கானாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இதற்காக அவர் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்த பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரதம் இருந்தார். தெலுங்கானாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், 3-வது நாளாக நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம்  தொடங்கிய ஷர்மிளா, தண்ணீர்கூட அருந்தாததால் மயக்கமடைந்து விழுந்தார்.

இதையடுத்து  உடனடையாக அவர்  ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com