காருடன் இழுத்து செல்லப்பட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி!

ஷர்மிளா ரெட்டி
ஷர்மிளா ரெட்டி
Published on

ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி, தெலுங்கானாவில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற பெயரில் கட்சி அமைத்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கானாவில் ஷர்மிளா ரெட்டிக்கும் ஆளும் கட்சியான சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கும் இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக ஷர்மிளா ரெட்டி அரசியல் தீவிரத்தை காட்டி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்த அவரது இல்லம் நோக்கி ஷர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு சென்றார். அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

இதனிடையே முதல்வரின் வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த போலீசார் ஷர்மிளா ரெட்டியை காருடன் வழி மறித்து தடுப்புகளை போட்டனர். ஆனாலும், ஷர்மிளா ரெட்டி காரில் இருந்து இறங்காமல் போராட்ட கோஷங்களை எழுப்ப, போலீசார் கிரேன் மூலம் ஷர்மிளா ரெட்டியை காருடன் அலேக்காக தூக்கி சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தரத்தில் காருடன் இழுத்து செல்லப்பட்ட ஷர்மிளா ரெட்டியை அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து கொண்டே கோஷம் இட்டு சென்றனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com