ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துணிக்கடையில் தீ விபத்து! கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்  துணிக்கடையில் தீ விபத்து! கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் துணிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தாக தெரிகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் நகரில் உள்ள கோபாலபட்டினம் பகுதியில் துணிக்கடை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே இன்று காலை அந்த துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், முதலில் புகை வெளியாகி கடையின் இரண்டு மாடிகளிலும் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தீக்கிரையாகின. முதற் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

திடீரென தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாகப்பட்டினம் தீயணைப்பு படையினர், கடையின் ஷட்டரை உடைத்து, தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது.

மேலும் தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த விசாகப் பட்டினம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழு தகவல்கள் இன்னமும் தெரிய வரவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com