அங்கன்வாடி பணியாளர்கள் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு கோஷங்களுடன் போராட்டம்.

அங்கன்வாடி பணியாளர்கள் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு கோஷங்களுடன் போராட்டம்.

ந்திய அரசால் நடத்தப்படும் தாய்சேய் நல மையம் தான் அங்கன்வாடி என்றழைக்கப்படுகிறது. இங்கு பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தை களுக்கான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. இங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்குத்  தேவையான ஊட்டச்சத்து, ஆரம்பகால கல்வி கற்பதற்கான சூழல் போன்றவைகளுடன் குழந்தைகள் ஆரோக்கியமாக பாதுகாப்பாக வளர்வதற்குத் தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

     இங்கு பணியில் அமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. பெண்களின் பாதுகாப்பில் குழந்தைகள் இருப்பதால் பணிக்குச் செல்வோர் கவலையின்றி இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கே பிரச்சினை என்றால்? சேலம் மையங்களில் இங்கு பணியில் இருப்பவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த நடத்திய போராட்டம் நடத்தியுள்ளனர்.  


      தங்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது மட்டுமின்றி தங்கள் கைகளில் இருந்த செல்போனில் விளக்குகளை ஒளிர விட்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பும் ஏற்பட்டது.

      அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம் உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை மினி மையம் ஆக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பத்து ஆண்டு பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு விடுமுறை ஒரு வருடம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

      போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது செல்போனில் விளக்குகளை ஒளிரவிட்டதுடன் “இதேபோன்று தங்களது வாழ்விலும் அரசு ஒளியேற்ற வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் குறித்து  மாநில துணைத்தலைவர் சரோஜா கூறும் போது “அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி செல்போனில் விளக்கு ஏற்றி எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று வலியுறுத்தி உள்ளார். அரசு இவர்களின் கோரிக்கைகளை ஏற்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com