அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக இணைந்து, 1971 ஆம் ஆண்டு தொடங்கிய காபி ஷாப் தான் ஸ்டார்பாக்ஸ். அன்றிலிருந்து இன்று வரை காக்கப்பட்ட இதன் ரகசியத்தை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார்பக்ஸ்-ல் கிடைக்கும் தனித்துவமான கோல்ட் காபி, ஹாட் காபி, மில்க் ஷேக் போன்ற பல பானங்கள் இங்கே பிரபலமானவை. தற்போது இது உலகெங்கிலும் 25,000-க்கும் அதிகமான அவுட்லெட்டுகளுடன் இயங்கிவரும் பிரபல நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த கால இளைஞர்களுக்கு ஒரு முறையாவது ஸ்டார்பக்ஸ் சென்று காபி குடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்டார்பக்ஸ்-ன் பிரபலமான சீக்ரெட் ட்ரிங்க்ஸ் ரெசிபி தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை அந்த நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் தான் வெளியே லீக் செய்துள்ளார். இந்த ரெசிபி ரகசியத்தை இணையத்தில் பார்த்த ஸ்டார்பக்ஸ் ரசிகர்கள், இதை இனி நம்முடைய வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்டார்பக்ஸ் பிரியர்களே. ஸ்டார்பக்ஸ் குறித்த இந்த லீக் உங்கள் அனைவருக்கும் கிடைத்த பரிசு. உங்கள் ஊழியர்களை தவறாக நடத்தினால் இப்படித்தான் நடக்கும். நீங்கள் குறைந்த ஊதியம் அளித்தாலும் பரவாயில்லை ஊழியர்களை மரியாதையுடன் நடத்துங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஸ்டார்பக்ஸ் குறித்து வெளியான தகவல் பலரது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இது இப்போதுதான் முதல் முறை நடப்பதல்ல. ஏற்கனவே இந்நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் டிக் டாக் தளத்தில் இதன் ரகசியத்தை வெளியிட்டுள்ளனர். இப்போது வெளியான ரெசிபி, ஸ்டார்பக்ஸ்-ன் பிரபலமான ட்ரிங்க்குகளைத் தயாரிக்கும் சிக்கலான செயல்முறையை துல்லியமாக விளக்கியுள்ளது.
இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.