₹17,000 கோடி மோசடி? அனில் அம்பானிக்கு ED சம்மன்..!

கடன் வழங்கப்படும் முன்பே Yes Bank நிறுவனர்களின் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ED summons Anil Ambani
ani ambani
Published on

ரிலையன்ஸ் குழுமத்தின் (Reliance Anil Dhirubhai Ambani Group - RAAGA) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான அனில் அம்பானி, அவரது குழும நிறுவனங்கள் மீதான கடன் மோசடித் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆகஸ்ட் 5 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, அவரது குழும நிறுவனங்களுக்கு எதிரான கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், அனில் அம்பானியை அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு அழைத்துள்ளது.

அனில் அம்பானி, 2025 ஆகஸ்ட் 5 அன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவர் ஆஜரானதும், பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act - PMLA) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமலாக்கத்துறை, கடந்த வாரம் அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக நடத்திய சோதனைகளுக்குப் பிறகு இந்த அழைப்பு வந்துள்ளது.

2025 ஜூலை 24 அன்று தொடங்கிய இந்த சோதனைகள் மூன்று நாட்கள் நீடித்தன. இந்த நடவடிக்கை, அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் செய்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ₹10,000 கோடிக்கும் அதிகமான கடன் மோசடியையும் நிதி முறைகேடுகளையும் சார்ந்ததாகும்.

ED சோதனைகள் மும்பை நகரத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டன. இதில் 50 நிறுவனங்களும், 25 நபர்களும், குறிப்பாக அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவன நிர்வாகிகளும் அடங்குவர்.

ED-வின் வட்டாரங்களின் தகவலின்படி, இந்த விசாரணையின் முக்கிய அம்சம் 2017 முதல் 2019 வரை Yes Bank வழங்கிய ₹3,000 கோடி மதிப்பிலான கடன் தொகை தவறான முறையில் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரிலையன்ஸ் பவர் (Reliance Power) மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராசட்ரக்சர் (Reliance Infrastructure) ஆகிய குழும நிறுவனங்கள் பங்கு சந்தைக்கு தெரிவித்த அறிக்கையில், இந்த நடவடிக்கையை அவர்கள் ஏற்கின்றனர் என்றாலும், இந்த சோதனைகள் தங்களது வணிக நடவடிக்கைகள், நிதி நிலைமை, பங்குதாரர்கள், ஊழியர்கள் அல்லது பிற பங்கு வைத்துள்ளவர்களில் எதிலும் எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : வருமான வரி மோசடி: நாடு தழுவிய சோதனை..!
ED summons Anil Ambani

ED-வின் விசாரணை வேறொரு முக்கிய அம்சத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது, கடன் வழங்கப்படும் முன்பே Yes Bank நிறுவனர்களின் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com