தமிழ் வழியில் இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு !

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக் கழகம் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இளங்கலை பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அந்த கல்லூரிகளில் தமிழ் வழி பிரிவு பாடங்களை நிறுத்தியுள்ளது.

என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளிலும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் முறையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகப் படுத்தியது. ஆனால் தற்போது தமிழ் வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அந்த கல்லூரிகளில் தமிழ் வழி பிரிவு பாடங்களை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தியுள்ளது.

அதே போன்று மருத்துவ படிப்புக்கான 'நீட்' உள்ளிட்ட தகுதி தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தாலும், 2023-24 ஆம் கல்வி ஆண்டுகளில் 11 கல்லூரிகளில் தமிழ் வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும் ஆங்கில வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் இந்த ஆண்டு 4 கல்லூரிகளில் தமிழ் வழி பிரிவு நிறுத்தப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி, ஆரணி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பி.இ. மெக்கானிக்கல் மற்றும் பி.இ. சிவில் படிப்புகள் நிறுத்தப் பட்டுள்ளது.

அதேபோன்று திருக்குவளை பகுதியில் உள்ள ஆங்கில வழி பி.இ. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பும், அரியலூர், பட்டுக்கோட்டையில் சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளும் நிறுத்தப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com