அவசரமாக டெல்லி புறப்பட்ட அண்ணாமலை... - கண்காணிக்கும் உளவுத்துறை?

அவசரமாக டெல்லி புறப்பட்ட அண்ணாமலை...  - கண்காணிக்கும் உளவுத்துறை?
Published on

மிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த நிலையில் அவர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஆளுநர் ரவியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்றார். இது தொடர்பாக ஆளுனரிடம் அண்ணாமலை ரிப்போர்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 உரிய பாதுகாப்பு

இதற்கு பதிலளித்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் , பாதுகாப்பு உபகரணங்கள், போலீஸ் பயன்படுத்தும் கருவிகள் எதிலும் எந்தவிதமான குறைபாடும் இல்லை. இதை எல்லாம் அடிக்கடி தணிக்கை செய்து வருகிறோம் என்றார்.

உபயோகம் இல்லாத உபகரணங்களை உடனடியாக தவிர்த்து வருகிறோம். தமிழ்நாடு போலீசிடம் இருக்கும் உபகரணங்கள் அன் தரமான உபகரணங்கள்தான். தமிழ்நாட்டிடம்தான் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் இருக்கின்றன. பிரதமர் மோடிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. மோடிக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

திங்கர் குப்தா

 இதற்கு முன்னதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை என்.ஐ.ஏ. இயக்குநர் திங்கர் குப்தா சந்தித்தார். கோவை கார் வெடிப்பு தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு மங்களூர் வெடிப்பில் தொடர்புடைய நபர் கோவையில் தங்கி இருந்ததும், ஊட்டியில் ஒருவர் இவருக்கு சிம் கார்ட் வாங்கி கொடுத்ததும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் ரவியையும் திங்கர் குப்தா சந்தித்து ஆலோசித்தார். தமிழ்நாட்டில் சமீபத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை மையமாக வைத்து இந்த சந்திப்பு நடந்தது.

அந்த ஆலோசனையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆர். என். ரவி முன்னாள் உள்துறை அதிகாரி என்பதால் முக்கியமான உளவு விஷயங்கள், உள்துறை தகவல்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் இன்று 11:30-மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்றார் என்.ஐ.ஏ. இயக்குநர் திங்கர் குப்தா. அதே விமானத்தில் பா.ஜ.க. அண்ணாமலையும் டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு பல்வேறு பணிகள் காரணமாக செல்லும் அண்ணாமலையுடன் அதே விமானத்தில் திங்கர் குப்தா செல்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வார்களா பேசிக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்த பயணம் உற்று கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, மாநில உளவுத்துறை இதை கவனித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com