அண்ணாமலை சர்வதேச அரசியல் படிக்க லண்டன் செல்கிறார்… பதவியின் நிலை என்ன?

Annamalai
Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் செல்ல உள்ளார். இதனால், அவர் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது பாஜக என்றால் அனைவருக்கும் மோடி ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ, தமிழக மக்களுக்கு அண்ணாமலை ஞாபகம் வருவார். தினந்தோறும் அவருடைய செய்தி ஒன்றாவது வந்துவிடுகிறது. அந்தளவுக்கு பிரபலமான ஒரு அரசியல்வாதி, அண்ணாமலை.

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த 2020ம் ஆண்டு பணியை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தற்போது அதில் தனக்கான இடத்தையும் பிடித்து பலரது செல்வாக்கையும் பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு தமிழக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதும், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினாலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை தோல்வியைத் தழுவினார். பின்னர் தமிழக பாஜகவில் பல்வேறு சலசலப்புகள் நிகழ, சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

இந்தநிலையில்தான் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பைப் பயில அண்ணாமலை மூன்று மாதங்கள் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரின் இந்தப் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவை பல்கலைகழகமே ஏற்றுள்ளது. இதற்கான விசா நடைமுறைக்காக அண்ணாமலை தற்போது பெங்களூரு சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும்-பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
Annamalai

இந்தப் படிப்பிற்காக அவர் மூன்று மாதக் காலம் வெளிநாட்டுக்கு சென்றால், யார் பாஜக மாநில பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழிநடத்துவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி - தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com