உளவுபார்த்ததாக மணீஷ் சிசோடியாக மீது மேலும் ஒரு வழக்கு!

உளவுபார்த்ததாக மணீஷ் சிசோடியாக மீது மேலும் ஒரு வழக்கு!
Published on

சட்டவிரோதமாக உளவுபார்த்ததாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

தில்லி அரசு துறையை பயன்படுத்தி அரசியல் புலனாய்வு மூலம் தகவல் சேகரித்ததான குற்றச்சாட்டின் பேரில் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு தொடர கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து அரசியல் புலனாய்வு மூலம் தகவல் சேகரிக்க ஒரு பிரிவை ஏற்படுத்தியிருந்ததாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி அரசு துறை மூலம் அரசியல் புலனாய்வு தகவல்களை சேகரித்ததான குற்றச்சாட்டின் பேரில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மீது வழக்கு தொடர சிபிஐக்கு கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

தில்லி அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட பல்வேறு துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பாடுகள் பற்றி தகவல்

சேகரிக்க தனி பிரிவை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு முன்மொழிந்தது.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்ததாகவும், ஆனால், இதுபற்றி எந்த சுற்ற்றிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் இந்த பிரிவுக்கான பணி நியமனங்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநரிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று சிபிஐ கூறுகிறது.

இந்த பிரிவு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேகரித்ததுடன், அரசியல் புலனாய்வு மூலம் எதிர்கட்சிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்தது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.

இந்த தனி பிரிவு மூலம் ஆம் ஆத்மி கட்சிக்காக அல்லது அதன் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக அரசியல் புலனாய்வு தகவல்களை சேகரித்துள்ளதன் மூலம் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதாக கருத இடமிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும், தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா மீது இப்போது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com