கர்நாடக முதலமைச்சர் போட்டியில் இன்னும் ஒருவர்: காங்கிரசில் புதிய பரபரப்பு!

கர்நாடக முதலமைச்சர் போட்டியில் இன்னும் ஒருவர்: காங்கிரசில் புதிய பரபரப்பு!

மீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காக முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கே.சி வேணுகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது, புதிய முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த முதலமைச்சர் போட்டியை இன்னும் பரபரபாக்கும் வகையில், அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரான ஜி.பரமேஸ்வராவும் கர்நாடக மாநில முதலமைச்சர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கக் கோரி, தும்குருவில் அவரது ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் பதவி வழங்கக் கோரி, முன்னாள் முதலமைச்சர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com