வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அதன் மூலம் நாளை மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;
வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தொடங்கி 16 –ம் தேதி வரை உருவாக வாய்ப்புள்ளது. இது புயல் சின்னமாக உருமாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் அப்படி புயல் சின்னமாக மாறமல் வலுவிழக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஆனால் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒருவேளை இந்த புதிய கத்தான் அதிகம் வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானால் அதற்கு மொக்கா எனப் பெயரிடப்படும்.
–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.