ஒடிசாவில் மேற்குப்பகுதியில் இன்னொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ரயில் விபத்தை தொடர்ந்து நடந்து வந்த சீரமைப்பு பணிகள் நேற்றிரவு முடிவடைந்த நிலையில் இன்னொரு ரயில் தடம் மாறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் ரெயில் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பர்காவ் மாவட்டத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒடிசாவின் மேற்குப்புறத்தில் உள்ள பார்காவ் மாவட்டம். இங்கு மேந்தப்பளிள் என்னுமிடத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் பாக்டரில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்ட வந்த தனியார் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சரக்கு ரயிலை இயக்கியவர்கள் காயமின்றி தப்பினார்கள். உயிரிழப்புகள் இல்லை. எனினும் இது குறித்து விளக்கமளித்துள்ள கிழக்கு ரயில்வே, தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரயில் என்பதையும் ரயில்வே துறைக்கும் விபத்துக்கும் சம்பந்தமில்லை என்று டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.