மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று கைதானார்.
2018ம் ஆண்டு மலேசியாவில் நான்கு பிரதமர்கள் பதவியேற்றுள்ளனர். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் முகைதின் யாசின் தோல்வியுற்றார். இதனையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மலேசியா முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆணையத்தின் தலைமையகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டது, பதவியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மலேசியாவின் பூமி புத்திரர்களுக்கான Jana Wibawa scheme என்ற நிதியுதவி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மொஹைதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியை சேர்ந்த இருவர் மீது கடந்த மாதம் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.