மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா!

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

டப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்தார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் வந்த அன்வர் ராஜா கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்வர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறு சறுக்கலுக்குப் பின்னர் நான் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன்.

என்னுடைய பெயர் என்னுடைய தோற்றம் எனது பெயரை அறிமுகப்படுத்திய எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்ததே மிகப் பெரிய அடையாளம் என பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஜூலை 5-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது, இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவும் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட தொடங்கியுள்ளது. இதனை ஒட்டியே அதிமுகவும் ஒரு மாத இடைவெளியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com