

தமிழக அரசின் மகளிருக்கான நலத்திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் விண்ணப்பித்தும் பயன் பெறாத பெண்களிடம் அதிருப்தியையும் தந்துள்ளது எனலாம்.
கலைஞர் மகளிர் மாதாந்திர உதவித்தொகை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை) திட்டம் 2023;ம் ஆண்டு அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வர் தலைமையில் காஞ்சிபுரத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்குவது என்ற அடிப்படையில், அவர்கள் பொருளாதார ஆதரவுக்காக இந்நிதி உதவியை நேரடியாக வழங்கும். இந்தத் திட்டம் மாதாந்திர உதவித் தொகை மட்டுமல்ல, பெண்களின் உரிமையாக வழங்கப்படும் முதன்மையான சமூக நல திட்டம் என அரசு குறிப்பிடுகிறது.
குடும்பத் தலைவியாக இருந்தும் பெயர் விடுபட்டவர்கள் ,ரேஷன் அட்டையில் பெயர் இருந்தும் தொகை வராதவர்கள், தவறான ஆவணங்கள் / தகவல் பிழை காரணமாக நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய குடும்பத் தலைவி (கணவர் மறைவு / பிரிவு / தனியாக வாழ்பவர்) போன்ற பல காரணங்களால் முதல் கட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் அடுத்த கட்டத்தில் விண்ணப்பித்து முதல் கட்டத்தில் விடுபட்டவர்களுக்காக பல ஊர்களில் முகாம்களை அமைத்து மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து தகுதியானவர்களுக்கு டிசம்பர் 12 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அதிகாரபூர்வமாக தொடங்கி வழங்கப்பட்டது. இந்த கட்டத்தில் 16-17 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மாதம் ₹1,000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
2ம் கட்டத்திலும் விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் விடுபடக்கூடாது எனும் நோக்கத்தில் KMUT இணையதளத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருக்கிறது. KMUT என்பது தமிழ்நாட்டின் (Kalaignar Magalir Urimai Thittam) பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி திட்டம் தொடர்பான இணையதளம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற அரசு சில விதிமுறைகள் வகுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு குடிமகளாக இருக்க வேண்டும். 18 வயது மேற்பட்ட பெண்ணாகவும் ,குடும்பத் தலைவி ஆக இருக்க வேண்டும். ரேஷன் அட்டையில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஒரு குடும்பத்திற்கு ஒரே பயனாளி மட்டுமே இருக்க வேண்டும்.
மாத வருமானம் ₹2.5 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.(அரசு நிர்ணயம்).அரசு நிரந்தர வேலை / ஓய்வூதியம் இல்லாத குடும்பமாகவும், வருமான வரி செலுத்தாத குடும்பமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் முறையான உபயோகத்தில் உள்ள வங்கி கணக்கு + ஆதார் இணைப்பு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கும் காரணங்கள் உள்ளன. குடும்பத் தலைவி என பதிவாகாத நிலை, ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக ஆண் பெயர் இருப்பது, வருமான வரி செலுத்துபவர் குடும்பத்தில் இருப்பது, குடும்பத்தில் யாராவது IT Return தாக்கல் செய்திருப்பது, அரசு நிரந்தர வேலை / ஓய்வூதியம் பெறுவது ,தவறான வங்கி விவரம் ,(Account number / IFSC பிழை), வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாமை, ஆதாருடன் வங்கி இணைக்கப்படாத கணக்கு, ஆதார் – ரேஷன் விவரம் பொருந்தாமல் போவது, பெயர், பிறந்த தேதி, முகவரி வேறுபாடு, ஒரே குடும்பத்தில் இரு பேர் விண்ணப்பம் போன்றவைகளால் நிராகரிக்கப்படலாம்.
முதல் இரண்டு கட்டங்களிலும் இந்த விதிகளில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருக்கும் நிராகரிக்கப்பட்டிருக்கும் என்பதால் அதை திருத்தி மீண்டும் www.kumt.in gov.in எனும் அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அருகிலுள்ள e-Sevai / CSC மையம் செல்லவும்“Kalaignar Magalir Urimai Thogai – Re-Application / Grievance” சேவையை தேர்வு செய்து ஆதார் அட்டை , ரேஷன் அட்டை , வங்கி விபரம் உள்ளிட்ட ஆவணங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு உதவித் தொகை பெற வழிவகுக்கும்.