மாதம் 25 கோடி வரை வருமானம் ஈட்டும் இந்திய ஆப்பிள் விற்பனை நிலையங்கள்.

மாதம் 25 கோடி வரை வருமானம் ஈட்டும் இந்திய ஆப்பிள் விற்பனை நிலையங்கள்.

ந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள ஆப்பிள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொன்றிலும் தலா 22 முதல் 25 கோடி ரூபாய் வரை மாதாந்திர விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரீடைல் ஸ்டோரைத் திறந்து வைத்தார். இந்த ரீடைல் ஸ்டோர் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில், ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து சில வாரங்கள் கழித்து டெல்லி சாகெட்டில் மற்றொரு ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் திறக்கப்பட்டது. 

மும்பையில் திறக்கப்பட்ட ரீடைல் ஸ்டோரில் அதன் தொடக்க நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கு ஆப்பிள் சாதனங்களின் விற்பனை நடைபெற்றது. இது ஒரு பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் கடை ஒரு மாதத்திற்கு ஈடும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகும். இந்தியாவில் இருக்கும் இரண்டு ஆப்பிள் ரீடைல் கடைகளும் திறக்கப்பட்ட நாளிலேயே 6000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மும்பையில் உள்ள ஸ்டோருடன் ஒப்பிடும்போது டெல்லியின் சாகெட் ஸ்டோரின் அளவு சிறியதாக இருந்தாலும், இரண்டு ரீடைல் கடைகளும் ஒரே மாதிரியான வருவாயை ஈட்டி வருகிறது. அதிலும் இந்த கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு வாடகை எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 40 முதல் 45 லட்சம் வாடகையாக வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். இத்தனை லட்சங்களை வாடகையாக செலுத்தியும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரு கடைகளுமே தலா 25 கோடி வரை மாதாந்திர விற்பனை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். இது பண்டிகை காலங்களில் மிகப்பெரிய மொபைல் போன் கடைகளில் விற்பனையாகும் லாபத்தை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாகும். 

இது மக்கள் மத்தியில் செல்போன் மோகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக பிராண்டட் பொருட்களுக்கு மக்கள் என்றுமே ஆதரவு அளிப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டி இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இனிவரும் நாட்களில் இந்தியாவில் பல இடங்களிலும் ஆப்பிள் தனது ரீடைல் ஸ்டோரை திறக்க இருக்கிறார்கள். அடுத்து வரவிருக்கும் மூன்று ஆப்பிள் ஸ்டோர்களும், மும்பை மற்றும் டெல்லி சார்ந்த இடங்களிலேயே திறக்கப்பட இருக்கிறது. 

இதனால் இந்தியாவில் ஆப்பிள் பொருட்களுக்கு எந்த அளவுக்கு மவுசு இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இதை சரியாகக் கனித்துதான், இந்திய சந்தையை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது பல நிறுவனங்களும். இதில் ஆப்பிள் நிறுவனம் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com