மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 பெற விண்ணப்பம் வீடுகளுக்கே சென்று விநியோகம் -சேலத்தில் அறிவிப்பு.

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 பெற விண்ணப்பம் வீடுகளுக்கே சென்று விநியோகம் -சேலத்தில் அறிவிப்பு.

தேர்தல் வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூபாய் 1000 க்கான விண்ணப்பப்படிவங்களை  வீடு வீடாக சென்று விநியோகம் செய்ய இருப்பதால் பொதுமக்கள் யாரும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவிசியமில்லை என சேலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. .

சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட முகாம் வருகிற 24-ம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடக்கிறது. ரேஷன் கடை பணியாளர்கள் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பங்களை வீட்டிற்கு நேரடியாக வந்து வழங்குவார்கள். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வர தேவையில்லை .

குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். அப்போது சரி பார்ப்பதற்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் இணைத்து இணைக்க தேவையில்லை.

விண்ணப்ப பதிவு முகாமிற்கு வரும் விண்ணப்ப தாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும் பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் கைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்தால் அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட அலுவலர் மேனகா மேலும் “ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பப் பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களைச் சரிபார்பிற்கு எடுத்து வரவேண்டும் . இரு குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுபாட்டு அறை 0427-2452202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com