மகளிர் உரிமை தொகை அப்ளிகேஷன் வெளியீடு.. எப்படி அப்ளை பண்ண வேண்டும்?

மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
Published on

செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கிகரிக்கும் வகையில் அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில், அந்த அம்சம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இந்தநிலையில், இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பட்டுக்கான பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ரேசன் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. ரேசன் அட்டைகளின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்களில் என தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் குடிநீர், மின்விசிறி, இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் அளிக்க வேண்டிய விண்ணப்பப் படிவத்தின் நகலும் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 விவரங்களை குறிப்பிடும் வகையில் விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. திருமணமானவர், விவாகரத்தானவர், கைவிடப்பட்டவர், கைம்பெண் ஆகியவற்றில் ஒன்றையும் விண்ணப்பதாரர் குறிப்பிட வேண்டும்

சொந்த வீடா? வாடகை வீடா? உள்ளிட்ட விவரங்களும், வீட்டின் மின் இணைப்பு எண்ணும் கேட்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிக் கணக்கு விவரம், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடும் வகையில் மாதிரி விண்ணப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com