

தமிழக அரசின் கொறடாவாக த.வெ.க. எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்.தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் த.வெ.க. எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,நாளை சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அரசு கொறடா நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய்யின் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகனும் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான சபரிநாதன், அரசு கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்.சட்டப்பேரவையில் தவெக கட்சி சார்ந்த அலுவல்களில் கொறடாவே முக்கிய முடிவுகளை முடிவெடுப்பார்.ஒரு அமைச்சருக்கு இணையாக அனைத்து சலுகைகளும் அரசு கொறடாவுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.