பல மணி நேரம் மொபைல் கேம் ஆடுபவரா நீங்கள்? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.

பல மணி நேரம் மொபைல் கேம் ஆடுபவரா நீங்கள்? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.
Published on

மீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் 58 நிமிடங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்ட கிரீன்களில் செலவிடுகிறார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நம்மில் பலரும், 24 மணி நேரத்தில் 7 மணி நேரத்தை லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் செலவிடுகிறோம். 

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் லேப்டாப்புகளைப் நம்முள் பலரும் பல காரணங்களுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த சாதனங்களில் கேம் விளையாடு வதற்கோ அல்லது சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதற்கோ அடிமையாகி விட்டால், பல மணி நேரத்தை அதில் செலவு செய்ய நேர்கிறது. ஆனால், நீண்ட நேரம் எலக்ட்ரானிக் திரைகளைப் பார்ப்பதால் ஏற்படும் கெடுதலைப் பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. 

நீங்களும் நீண்ட நேரம் எலக்ட்ரானிக் திரையில் நேரத்தை செலவிடும் நபராக இருந்தால், தற்போது நான் கூறப்போகும் 5 கெடுதல்களில் ஒன்றையாவது நீங்கள் சந்திக்க நேரிடும்.

  1. நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பை பயன்படுத்துவதால் முதலில் மனம் மற்றும் உடல் ஆரோக்கியக் கோளாறு ஏற்படும். கேம் விளையாடும் பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் ஒரே நிலையில் மணிக்கணக்கில் இருப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இப்படி இருக்கும் பட்சத்தில் உடல் பருமன், தூக்க கோளாறுகள், மன அழுத்தத்தை இது உருவாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. 

  2. 'அஸ்தனோபியா' எனப்படும் கண் சோர்வுப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் கேமிங் விளையாடுவது கண்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் நீங்கள் கேம் விளையாடுபவராக இருந்தால், இந்த நிலை மிகவும் மோசமாகும். இரவு நேரங்களில் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் மொபைல் ஸ்க்ரீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அஸ்தனோபியா உங்களை தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. 

  3. முக்கிய வேலைகளில் கவனம் செலுத்தாமல் போவதும் கேம் விளையாடுபவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகும். ஒருவர் குறிப்பிட்ட கேமிற்கு அடிமையாகிவிட்டால், அவர் செய்ய வேண்டிய முக்கிய செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாக்கிவிடும். இது நிச்சயமாக உங்களின் உற்பத்தித் திறனை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு செல்லும். 

  4. கேமிற்கு அடிமையாகி விட்டால் சமூக வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். நம் அன்புக்குரியவர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை என்றால், மெல்ல மெல்ல சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேறி, இறுதியில் தனிமரமாகி விடுவீர்கள். 

  5. இறுதியாக, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்புக்களில் விளையாடப்படும் கேம்களை, பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது இணையத்திலிருந்தோ தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது, சில கேம்களில் மால்வேர்கள் இருக்கும். அதைத் தவறுதலாக நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில், உங்களின் சாதனம் பாதிப்புக்குள்ளாகி தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் திருடுபோக வாய்ப்புள்ளது. 

மேற்கூறியது போல, அதிக நேரம் கேம் விளையாடுவதால் பல்வேறு விதமான பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே உங்களுடைய உடல் நலத்திற்கு சற்று முக்கியத்துவம் கொடுத்து எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள முயலுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com